Friday, May 20, 2022
HomeJaffna Newsவிடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி இடைநிறுத்தம்

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி இடைநிறுத்தம்

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள குழியில் மழை நீர் நிரம்பியுள்ளதால், அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அதற்கமைய, நாளை (03) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

போர்ச்சூழலில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியில் இன்று பகல் 2 மணியளவில் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

மாலை 05 மணி வரை அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

முல்லைத்தீவு நீதவான், பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு இன்று சென்றிருந்தனர்.

இதேவேளை, ​போர்ச்சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை இரகசியமாக தோண்டியெடுப்பதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றவர்களில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஒருவரும் அடங்குகின்றார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments