Saturday, January 22, 2022
HomeLocal Newsசீன சேதன பசளை விவகாரம் பின்வாங்கும் நிலையில் அரசாங்கம்!

சீன சேதன பசளை விவகாரம் பின்வாங்கும் நிலையில் அரசாங்கம்!

சீன சேதன பசளை மாதிரிகளை மீண்டும் பெற்று பரிசோதனைக்கு உட்படுத்த இலங்கை தீர்மானித்துள்ளது. இதனை கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே வெளிப்படுத்தினார். தனது நாட்டு நிறுவனத்தின் பிரச்சினையை அரச பிரச்சினையாகக் கொண்டு கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் நெருக்குதல்களே இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு வர காரணமாகியுள்ளது.

இந்த பசளை பிரச்சினையால் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையில் எவ்வித முரண்பாடும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் கூறும் அளவிற்கு நிலைமை இன்று மாறியுள்ளது. சீனாவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட சேதன பசளையில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாக தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி, தனிமைப்படுத்தல் சேவை நிலையம் உறுதி செய்தது. இதனை தொடர்ந்து அந்த பசளையை அரசாங்கம் நிராகரித்தது.

ஆனால் சீனா பிடிவாதமாக செயற்பட்ட நிலையில் , குறித்த கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதியளிக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவித்தது. சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள உத்தேசிக்கப்பட்ட சேதன பசளை மாதிரி உரத்தில் இலங்கையின் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கியிருப்பது இரண்டு முறை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் போது உறுதிப்படுத்தப்பட்டன.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த சீனா , ‘சர்வதேச தாவரவியல் பாதுகாப்பு பிரகடனத்தின்படி ஏர்வினியா நுண்ணுயிர் கண்டறிவதற்கு குறைந்தது 6 நாட்களேனும் தேவைப்படும். இவ்வாறானதொரு நிலையில் இலங்கை எவ்வாறு 3 நாட்களில் பரிசோதனையை செய்து நுண்ணுயிர் இருப்பதை உறுதி செய்தது என கேள்வி எழுப்பி அரசாங்கத்தின் நிராகரிப்பை சீனா சவாலுக்கு உட்படுத்தியது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments