கெசல்வத்த படுகொலை: 4 சந்தேக நபர்கள் கைது, சிசிடிவி வெளியீடு
சனிக்கிழமை (04) இரவு ‘கெசல்வத்த பவாஸ்’ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எமது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பழைய மூர் வீதிக்கு அருகில் 33 வயதுடைய நபர் சிலரால் துரத்திச் செல்லப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்திய நான்கு வாள்கள் மற்றும் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் கொலை மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களின் செயல்கள் பதிவாகியுள்ளன.