கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பதவி நீக்கம்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நிறுவன ரீதியிலான விடயங்களை அடிப்படையாக வைத்து இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம தெரிவித்துள்ளார்.
குறித்த பதவிக்கு தகுதிகளுடைய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஷாந்த ரத்னவீரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என கூறினார்.