Saturday, May 21, 2022
HomeLocal Newsஇலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்க அறிவிப்பு(LIVE)

இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்க அறிவிப்பு(LIVE)

நாட்டில் மக்கள் புரட்சியை தடுக்க முடியாது என்று எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டில் மக்கள் புரட்சி வெடித்துள்ளதாகவும், மக்கள் புரட்சியை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெட்ரோலுக்கு வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. எரிவாயுக்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கு என்று அனைத்திற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் ஊரடங்கினை பிறப்பிப்பதாலோ அல்லது அவரச காலச் சட்டத்தை கொண்டு வருவதாலோ அன்றி சமூக வலைத்தளங்களை முடக்குவதாலோ மக்கள் புரட்சியை தடுக்க முடியாது.

மக்கள் தற்போது இந்த ஆட்சிக்கு எதிராக வெளியே வந்துவிட்டார் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments